Categories
உலக செய்திகள்

“அதிசயம்!”.. மனித வரலாற்றில் முதன் முறை.. 3 பிறப்புறுப்புக்களுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்களின் முடிவு..!!

ஈராக்கில் மனித வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு குழந்தை 3 பிறப்புறுப்புக்களுடன் பிறந்து ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஈராக்கின் வட பகுதியில் உள்ள மொசூலுக்கு அருகில் இருக்கும் டோஹுக் என்ற நகரில் ஒரு ஆண் குழந்தை மூன்று பிறப்புறுப்புக்களுடன் பிறந்துள்ளது. இது வரலாற்றில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து டாக்டர் சலீம் ஜபாலி கூறியுள்ளதாவது, மனித வரலாற்றிலேயே 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த முதல் குழந்தை இது தான். இது triphalliya என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு இதுபோல் பதிவானது இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது சுமார் 6 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் அதில் ஒரு குழந்தை Diphalliya எனப்படும் இரண்டு பிறப்புறுப்புக்களுடன் பிறக்குமாம். ஆனால் ஆச்சரியமாக முதல்முதலில் மூன்று பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் இந்த குழந்தைக்கு ஒரு பிறப்புறுப்பு தான் செயல்படுகிறதாம்.

மற்ற இரண்டு உறுப்புகளால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது. எனினும் மருத்துவர்கள் அதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடுவது தான் நல்லது என்று கூறுகின்றனர். குழந்தையின் செயலற்ற இரண்டு உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஷாஹிர் சலீம் ஜபாலி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |