நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாக்கியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி . இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூர் மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர் .
Embark on Jaya’s superstar journey where her enchanting charm made the masses her huge fans! #ChaliChali #MazhaiMazhai #IlaaIlaa out now!
Hindi: https://t.co/YTRbve05XW
Telugu: https://t.co/TeJld2BcZU
Tamil: https://t.co/JfgjGZHSBo @KanganaTeam @thearvindswami #Vijay @vishinduri— Thalaivii The Film (@thalaiviifilm) April 2, 2021
சமீபத்தில் ‘தலைவி’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான மழை மழை பாடல் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் எழுதியுள்ள இந்த பாடலை சைந்தவி பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.