நெல்லையில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 70 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி நகரில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை மறித்தனர். இதனையடுத்து பறக்கும் படையினர் காரை சோதனை செய்ததில் அவர் உரிய ஆவணங்களின்றி 23 1/2 லட்சம் மதிப்பிலான 70 பவுன் தங்க நகை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் 70 பவுன் நகையை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.