Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லனா… டாஸ்மாக்ல மது பாட்டில் கிடையாது … சத்தீஸ்கரில் அதிரடி உத்தரவு …!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முக கவசம் அணியாமல், மதுபான கடைகளுக்கு வந்தால் மது வழங்கப்படமாட்டாது, என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தற்போது  கொரோனா  வைரஸின் தாக்கம் , அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில்  மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. வடமாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வைரஸின்  தாக்கமானது அதிகரித்து உள்ளது. இதுவரை சத்தீஸ்கர்  மாநிலத்தில்  4, 563 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதாகவும் ,இதில் ஒரேநாளில் 29 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

இதன்காரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ,பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மதுபான கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் ,முக கவசம் அணிந்து வராமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு ,மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது ,என்று மதுபான கடைகளுக்கு அரசு அதிரடியாக அறிவித்தது  . இதற்காக அனைத்து மதுபான கடைகளுக்கும் தலா 10 ஆயிரம்  ரூபாய் , கிருமிநாசினி, முக கவசம் வழங்குதல் போன்ற பணிகளை செய்வதற்கு அரசு ஒதுக்கியுள்ளது.

Categories

Tech |