Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களுக்கு தேவையானதெல்லாம் இருக்கா…? திடீர்னு களத்திலிறங்கிய தேர்தல் அதிகாரி…. மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியிலிருக்கும் வாக்கு சாவடி மையங்களை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் 458 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பார்வையாளரான சஞ்சய் சின்கா திடீரென்று திருப்பரங்குன்றத்திலிருக்கும் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.

அதில் அவர் மக்களுக்கு தேவைப்படுகின்ற அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்றவை உள்ளதா என்று பார்வையிட்டுள்ளார் . மேலும் திருப்பரங்குன்ற தொகுதிக்குட்பட்ட தபால் ஓட்டுகளையும் மேற்பார்வையிட்டார். இதில் சில முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |