இயக்குனர் பொன்ராம் குக் வித் கோமாளி பிரபலம் புகழுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 46வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது .
https://twitter.com/ponramVVS/status/1377500802382757889
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் புகழ் பைக்கில் செல்லும் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் புகழுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சந்தானம், அருண் விஜய் ஆகியோரின் படங்களிலும் புகழ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.