மதுரையில் பறக்கும் படையினர் அரிசி வியாபாரியிடமிருந்து 70,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம்பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலைகண்காணிப்பு குழுவினரையும் நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் பறக்கும் படையின் அதிகாரியான வாசுகி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அரிசி வியாபாரி உரிய ஆவணங்களின்றி 70,000 ரூபாய் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன்பின் பறக்கும் படையினர் அரிசி வியாபாரியிடமிருந்த பணத்தினை பறிமுதல் செய்து வாடிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.