Categories
உலக செய்திகள்

அழகி போட்டியில் வென்ற பெண் கொலை …தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ..!!கணவனின் வெறிச்செயல் ..!!

அழகி போட்டியில் வென்ற பெண்ணை அவரின் கணவர் தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள நோவாட்வின்ஸ்க்  என்ற இடத்தில் 33 வயதான ஓல்கா ஷில்லியாமீனா என்ற பெண்ணின் தலையற்ற உடல் பனி நிறைந்த வனப்பகுதியில் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓல்காவை ஏற்கனவே  5 நாட்களாக காணவில்லை என்று அவரின்  பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் அவரின் தலையற்ற உடல் கிடைத்தது குடும்பத்தினருக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் ஓல்காவிற்கும் அவரின் 40 வயதான கணவர் வ்யாசெஸ்லவிற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு பிரிய திட்டமிட்டிருந்ததாக அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர். அதற்க்கு காரணம் ஓல்கா உள்ளூர் அழகிப் போட்டியில் வென்றதால் அவர் மற்றவர்களுடன் நெருக்கமாக பழகியதாக கூறி இருவருக்கும்  இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது .

எனவே  வ்யாசெஸ்லவ் தன் மனைவியே வாக்கிங் செல்வதாகக் கூறி அழைத்து அவரின் தலையை வெட்டி உடலை பணியில் புதைத்தாக போலீஸ் கருதுகின்றனர் .மேலும் இதுதொடர்பான விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது

Categories

Tech |