Categories
மாநில செய்திகள்

ஆ.ராசாவுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

ஆ .ராசாவிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அண்மையில் திமுக எம்பி ஆ. ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பற்றி தவறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது.

அவர் அளித்த பதில் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் 48 மணி நேரத்திற்கு அவர் பிரச்சாரம் செய்யவும், நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து அவரை நீக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |