Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் அரளி விதையை குடிச்சிட்டேன்”…மனைவியை காப்பாற்ற சென்ற போது நடந்த கோர விபத்து…சேலத்தில் பரபரப்பு….!!

சேலம் மாவட்டத்தில் மொபட் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சூர்யா வீட்டில் சரவணன் இல்லாத போது  அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். பின்னர் கணவர் வீட்டிற்கு வந்தவுடன்  தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் அதிர்ச்சியடைந்த சரவணன் பக்கத்துவீட்டு கஸ்தூரி உதவியுடன் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில்  மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்.

இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் ஆனந்தி என்பவர் வசித்து வந்தார். பயிற்சி பெண் டாக்டரான ஆனந்தி தர்மபுரி மாவட்டத்திலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து இவர்கள் ஆச்சாங்குட்டம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி என்ற பெண்  சரவணனுடைய மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டார். அந்த விபத்தில் 4 பேரும் படுகாயமடைந்தனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆனந்திக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இதுக்குறித்து காவல் துறையினர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |