Categories
தேசிய செய்திகள்

WOW: இன்று முதல் பெண்களுக்கு இலவசம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “அமைச்சரவையில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அதிகாரிகள் அனைவரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |