Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் ஆட்டோ…. மோதலில் ஏற்பட்ட தீ விபத்து… நால்வர் உடல் கருகி பலி..!!

கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் டிக்சல் பகுதியை சேர்ந்த கர்ஜாத்-நெரல் சாலையில் ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சாலை விபத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories

Tech |