வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், ‘பான் கார்டு’ வைத்திருப்போர், அதை, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கான இறுதிக்கெடு, கடந்த ஆண்டு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இதற்கான காலவரம்பு, நடப்பாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ‘இந்த காலவரம்பை மேலும் நீட்டிக்க முடியாது’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் கார்டு செயலிழப்பு ஏற்படும் என்றும் இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே, பான் கார்டு வைத்திருப்போர், அதை இன்றுக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. அதேநேரம் உங்களுடைய ஆதார்- பான் கார்டு ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வரலாம். உங்கள் ஆதார் அட்டை மற்றும் PAN கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாக சரிபார்க்கலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது எளிதானதுதான்.
முதலில் www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். அல்லது https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html கிளிக் செய்து அதில் PAN மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடூ செய்து, ‘View Link Aadhaar Status’ என்பதைக் கிளிக் செய்யவேண்டும். அவ்வளவுதான் இணைப்பின் நிலை அடுத்து தோன்றும் திரையில் காண்பிக்கப்படும்.