Categories
மாநில செய்திகள்

“இட ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என முதல்வர் தெரிவித்தார்”…. ராமதாஸ் தகவல்..!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் என்பது நிரந்தரமானது அதை யாரும் நீக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 10.5 சதவீத இடங்கள் வன்னியர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த சட்டம் தற்காலிகமானது என பலரும் பேசுகின்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது. அது யாரும் நீக்க முடியாது. சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என முதல்வரே உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார். இட ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என சமூக நீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |