Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெயிலின் தாக்கத்தால் உற்சாக குளியல்… ரொம்ப கவனமா இருங்க… சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் கோடை காலத்தை முன்னிட்டு சிறுவர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் தன்னார்வ அமைப்பினரால் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தெப்பகுளத்தில் இந்த வருடம் பெய்த கன மழையால் நீர் நிரம்பியுள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் காளையார் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் உற்சாகமாக மகிழ்வோடு குளித்து வருகின்றனர். அங்கு சிறுவர்கள் கரையிலிருந்து குளத்தில் குதித்து குளிக்கின்றனர். தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் சிறுவர்கள் குளிக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |