Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க”…. பயனுள்ள வீட்டு மருந்து…!!

தினசரி நம் உணவில் கற்றாழையில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பதை இதில் பார்ப்போம்.

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் உட்கொள்ளும் உணவுகள் தான் நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. பல வகையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் உடல் பல பிரச்சினைகளை எதிர்த்து போராடுகிறது. நாம்  முழுமையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் பருமன் காரணமாக பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். பலவற்றை முயற்சித்தும் பலனில்லாமல் மனவருத்தத்தில் உள்ளனர்.

அவர்கள் கற்றாழை சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உங்கள் உடல் பருமனை குறைக்க முடியும். மேலும் தோல் மற்றும் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். இதில் உள்ள துத்தநாகம், கால்சியம், இரும்பு, தாமிரம், சோடியம், குரோமியம், மக்னீசியம் ஆகியவை நம் உடலுக்கு நன்மை தரும். பல நோய்களை தடுக்கும் திறன் கொண்டதாக இது உள்ளது. கற்றாழையை  நாம் தினமும் பயன் படுத்தா விட்டாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது இதனை பயன்படுத்த வேண்டும்.

இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் பல மடங்கு நன்மை நமக்கு உண்டு. யாராவது மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இந்த சாறு  நன்மையை தரும். குளிர்காலம் வந்தவுடன் பலரும் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். இந்த பருவத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை விரைவில் நம்மை ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட நேரங்களில் இந்த சாற்றை நாம் சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும். சில சமயம் நமக்கு வாயில் கொப்புளங்கள் ஏற்படும் நமக்கு பிடித்த உணவை சாப்பிட முடியாமல் போகும்.

அதற்கு காற்றாலை சாரை குடித்து வந்தால் இந்த பிரச்சனையை தீரும். கற்றாழை சாறை முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் கண்ணுக்கு அடியில் உள்ள கருவளையம் போன்றவற்றில் தேய்த்துவந்தால் அந்த பிரச்சினைகளிலிருந்து குணமாகும். நீரழிவு நோய், மூலநோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட இதை பருகுவது நல்லது. இதைத் தவிர சமைக்கும்போது எண்ணெய் தெரிதல்அல்லது வேறு பல காரணங்களால் உடல் பகுதியில் எரிகிறது என்றால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் கற்றாலையை அந்த இடத்தில் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |