வியட்நாமில் விமான ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றை பரப்பியதாக நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
வியட்நாமின் விமான சேவை நிறுவனத்தில் Duong Tan Hau(29) என்பவர் ஊழியராக பணிபுரிகிறார். வியட்நாம் நீதிமன்றம் இவர் மீது கோரோனோ கட்டுப்பாடுகளை மீறுதல், மக்களுக்கு வைரஸை பரப்புதல் போன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இரண்டு வருடங்கள் தண்டனை விதித்துள்ளது.
அதாவது Duongவிற்கு கடந்த நவம்பர் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களில் விதிகளை மீறியுள்ளார். மேலும் வியட்நாமிற்கு ஜப்பானிலிருந்து விமானம் வந்துள்ளது. அதில் தன் பணி நிறைவான பிறகு சுமார் 46 நபர்களை சந்தித்துள்ளார்.
இதனால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருந்த போதும் தன் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தவறாது சந்தித்து வந்ததாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இவரின் இந்த செயல்பாட்டினால் 2,000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் இந்த சோதனை மேற்கொள்ள நகர நிர்வாகம் 1,94,192 டாலர் பணத்தை செலவு செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இவரால் மூன்று நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் வியட்நாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 2600 பேர் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக குறைந்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொரோனாவை பரப்பும்படி விமான பணியாளர் செயல்பட்டது கண்டிக்கப்படவேண்டியது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.