Categories
தேசிய செய்திகள்

ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை…. வெற்றிகரமாக நடந்துமுடிந்தது..!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை மருத்துவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர்.

இதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |