கொரோனா தொற்றின் பிந்தைய உலகிற்கான புதிய ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் .
பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கொரோனா தொற்று என்பது எல்லாரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லாததை நினைவூட்டுவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கொரோனா தொற்று தொடர்பான தயாரிப்புக்காகவும் எதிர்கால சுகாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவும் புதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட 23 நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கோரிக்கையை வைத்துள்ளனர். இதுவரை 2.8 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றிக்காக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.கொரோனா தொற்று என்பது 1940 க்குப் பிறகு உலகிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் என்று உலக தலைவர்கள் கூறியுள்ளனர்.