Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருவேளை இங்கதான் இருக்குமோ…. களமிறங்கும் கும்கி யானை…. வனத்துறையினரின் தீவிர தேடுதல்….

இரண்டு பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானையை கும்கி யானை பொம்மனுடன் சேர்ந்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள பெருங்கரை பகுதியில் முத்துசாமி கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வனப்பகுதி வழியாக சடையன் என்பவருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை இருவரையும் மிதித்து கொன்றுவிட்டது. இதனை கண்டித்து பந்தலூர் பட்டவயல் சாலையில் பொதுமக்கள் யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் வனத்துறையினர் 3 குழு அமைத்து அந்த காட்டு யானையை கண்காணித்து வந்துள்ளனர். தற்போது அந்த காட்டு யானை மற்ற காட்டு யானைகளுடன் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் ஒரு வனப்பகுதியில் முகாமிட்டிருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இந்த காட்டு யானையை கும்கி யானை பொம்மன்உதவியுடன் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |