Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களின் ஜாதி பிடிவாதம்…” ரயில் தண்டவாளத்தில் உயிரை விட்ட காதல் ஜோடி”…. கொடூர சம்பவம்…!!

ஆந்திராவில் காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவர் 9 மாதங்களாக பேஸ்புக் மூலம் நாகினேனி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் பெற்றோர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பு இல்லை என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து காலையில் எப்பொழுதும் போல கல்லூரிக்கு கிளம்பி சென்றுள்ளனர்.

ஆனால் இரவு பத்து மணி ஆகியும் வீட்டிற்கு வராததால் இரு வீட்டு பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள் காலையில் ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் ஆண் பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து அந்த உடலை அடையாளம் கண்டனர். பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |