தாய்லாந்து நாட்டில் சமைப்பதற்காக பெண் ஓருவர் நத்தையை வாங்கியதில் அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது.
தாய்லாந்து நாட்டில் சட்டுன் என்னும் மாகாணத்தில்kodchakorntantiwiwatkul என்ற பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவரது தந்தைக்கும் விபத்து ஒன்று ஏற்பட்டு சமீப காலமாக படுத்த படுக்கையாக இருக்கிறார் . இந்நிலையில் அந்தப் பெண் வீட்டில் சமைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி மீன் சந்தைக்கு சென்று சுமார் 160 ரூபாய்க்கு நத்தைகளை வாங்கிச் வந்துள்ளார்.அதன்பிறகு வீட்டில் நத்தைகளை சுத்தம் செய்தபோது மஞ்சள் நிறம் கொண்ட 6 கிராம் எடை உள்ள ஒரு கல் அந்த நந்தையில் இருந்துஉள்ளது.
அதனை பார்த்த அவர் சாதாரண கல் என்று நினைத்துள்ளார்.அதன் பிறகு இணையதளத்தில் அந்த கல் பற்றி தகவலை தேடிய போது அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது.அதில் அந்த கல் ஒரு சாதாரண கல் இல்லை என்றும் அது ஆரஞ்சு மெலோ முத்து என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். மேலும் அந்த முத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டார். அதனால் இந்த விலைமதிப்புமிக்க முத்து தனக்கு கிடைத்து வெளியே தெரிந்தால் அந்த நத்தை வாங்கிய கடைக்காரர் தகராறு செய்து விடுவார் என்று நினைத்து தன் குடும்பத்தினரிடம் கூட அவர் இது பற்றி சொல்லவில்லை.இதனையடுத்து அந்த முத்துக்களை ஆன்லைன் மூலமாக பலரும் விற்பனை செய்துள்ளதாக தெரிந்து கொண்ட அவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த முத்தை அவர் விற்க முடிவு செய்துள்ளார்.