நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பின்போது படகை நிறுத்துவதற்காக வேகமாக ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம் படத்தின்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .
இவர் நடிகர் நிதினுடன் இணைந்து நடித்த ‘ரங் தே’ என்ற தெலுங்கு படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் க்யூட்டான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் கீர்த்தி ரங் தே படத்தின் படப்பிடிப்பின்போது படகை நிறுத்துவதற்காக தலை தெறிக்க ஓடுகிறார் . ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோவுக்கு தற்போது ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.