பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்முடன் நெருக்கமான உறவில் இருந்ததாக அமெரிக்க பெண் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்(56) ஜெனிஃபர் ஆர்குரி(35) என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த தகவலை அந்தப் பெண் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் போரிஸ் ஜான்சனுடன் 2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தன்னுடன் நெருக்கமான உறவில் இருந்ததாகவும் அப்போது அவருக்கு மெரினாவீலர் என்ற பெண்ணுடன் திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்ததாகவும் கூறினார்.
போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்தார் என்றும் அபோது தான் தன்னை முதன்முதலில் சந்தித்ததாகவும் கூறினார். ஜெனிஃபர் ஆர்குரி தமக்கு போரிஸ் ஜான்சனின் மீது உடல் மற்றும் பதவி ரீதியான ஈர்ப்பு ஏற்பட்டது என கூறினார். மேலும் போரிஸ் ஜான்சன் அவரிடம் பலமுறை அந்தரங்க புகைப்படங்களை கேட்டுள்ளார் என்றும் அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அந்த புகைப்படங்களை அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.
போரிஸ் ஜான்சன் கடந்த 2019 காலகட்டத்தில் தனக்கு ஆபத்து வரும் என்ற நிலையில் தன்னை விட்டு சென்றதாகவும் கூறினார். மேலும் தங்களின் உறவு நான்கு ஆண்டு காலமாக நீடித்ததாகவும் அப்போது இருந்த காதல் தற்போது ஜான்சனிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.