சிவகங்கையில் வருமான வரித்துறையினர் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருடைய வீடு உள்ளது. அவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் பறக்கும் படை தாசில்தார் மயிலாவதி தலைமையிலான குழுவினர், மதுரை வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழுவினரும் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அவருடைய வீட்டின் பின்புறம் இருந்த தோட்டப் பகுதிகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லை. இதனால் அங்கிருந்த அதிகாரிகள் திரும்பி சென்றுவிட்டனர். வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.