நீண்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகை சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்தான் தீபக். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சியை தயாரித்தும் வந்தார்.
அதன்பிறகு அவரை திரைத்துறை பக்கமே காண முடியவில்லை.இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தீபக் மீண்டும் சீரியலில் இணைந்துள்ளார். அதன்படி விஜய் டிவியில் தயாராகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் தான் தீபக் ஹீரோவாக நடிக்க உள்ளார். தீபக்கின் ரீ என்ட்ரியை பல பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.