எகிப்தில் ஒன்பது மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 8 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்து தலைநகரமான கெய்ரோவில் சனிக்கிழமை இரவு 9 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது .விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி இறந்ததாகவும் மேலும் 29 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டனர்.
சம்பவ இடத்தில் மீட்பு குழு இரவு நேரம் தேடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .மேலும் எகிப்தில் கட்டிடம் இடிந்து விழுவது புதிதானது அல்ல என்று கூறப்படுகிறது.