‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோவை இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், துஷாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
We present to you the Characters from “The World of #Sarpatta “ that we loved creating and you will love watching. Another labour of love from all of us. @officialneelam @K9Studioz @arya_offl https://t.co/7NyTQiCXDR
— pa.ranjith (@beemji) March 28, 2021
மேலும் இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடல் தோற்றத்தை முரட்டுத்தனமாக மாற்றிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மிரள வைத்தார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது . இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோவை இயக்குனர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.