முதல்வரை தவறாக பேசியதன் காரணமாக ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா முதலூர் பழனிச்சாமியை தவறாக பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் சேலம் பேருந்து நிலையத்தில் உருவபொம்மையுடன் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.