ஜெர்மனியில் வாழ்ந்து வரும் தமிழ் அகதிகளை ஜெர்மனி அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக முடிவு செய்துள்ளது.
ஜெர்மனி வடக்குரைன் வெஸ்ட்பாலியா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஜெர்மன் அரசு நாடு கடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக கைது செய்து வருகிறது. மேலும் அவர்கள் பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் மார்ச் 30 ஆம் தேதி Dusseldorf விமான நிலையத்திலிருந்து இலங்கை விமானத்தில் அவர்களை நாடு கடத்த உள்ளனர் என தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை கேட்ட தமிழ் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பின்பும் ஜெர்மன் அரசு நாடு கடத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது என்றும் சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் செயல்படுவதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் அகதிகள் ஜெர்மனியில் தங்குவதற்கான அனுமதி சான்றிதழ் புதுப்பிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஜெர்மனியின் இந்த செயல் பல்வேறு நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த மக்களிடடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.