ஆளுங்கட்சியினர் மக்களை நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளனர் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தொகுதி தொகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது ஆளும் கட்சி மக்களையும் தொண்டர்களையும் நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்று விமர்சித்தார்.
தொகுதிக்கு தலா 50 கோடி, 100 கோடியை இறக்கிவைத்து பணம் கொடுத்து வாக்கை பெறலாம் என்று எண்ணுகின்றனர். துரோக ஆட்சியாளர்கள், தமிழினத் துரோகிகளை ஒழிக்க வேண்டும். தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அதிலும் பித்தலாட்டத்தை கொண்டு வந்துள்ளனர் என்று விமர்சித்தார்.