உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியின் காதலன் மீது ஆசிட் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முற்பட்டதால் காதலி காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார். அந்த இளைஞன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் தேவேந்திரா, சோனம் ஆகியோர் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காதலன் திடீரென்று வீட்டில் வேறு ஒரு பெண்ணை பார்த்தால் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார். இதனால் வீட்டில் மின்விசிறியை சரி செய்யுமாறு அழைத்து காதலன் மீது ஆசிட் வீசி உள்ளார். இது காவல்துறையின் விசாரணையின்போது தெரிய வந்தது.