Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…மேற்கு வங்காளம் ,அசாம் மாநிலங்களில்…விறுவிறுப்பாக நடந்தது …!!!

மேற்கு வங்காளம் ,அசாம் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான   முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

இந்தியாவில் சட்டமன்ற தேர்தலானது  தமிழ்நாடு ,கேரளா, புதுச்சேரி ,அசாம் ,மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கு ,தலைமை தேர்தல் ஆணையமானது  அட்டவணை ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு ,கேரளா ,புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கு  அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் .மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்காளத்தில் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறும்.

இதுபோன்று அசாமில் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை 3 கட்டங்களாக நடைபெறும். அதன்படி மார்ச் 27 ஆம் தேதியான இன்று மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும் அசாமில் 47 தொகுதிகளிலும் மொத்தமாக 77 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் 77 தொகுதிகளில்  அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் ,கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதற்காக வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் முகக் கவசங்கள் மற்றும்  கையுறை வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கையில் துப்பாக்கி ஏந்திய ராணுவப்படை வீரர்களும் ,போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு மாநிலங்களிலும் காலை 6 மணியிலிருந்தே வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.தற்போது கோடை காலம் மற்றும் கொரோன தொற்று  என்பதால் , வாக்கை பதிவு செய்வதற்கு  கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது .

Categories

Tech |