Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் அப்படி பண்ணுனோம்… மாமியார்-மருமகள் கொடூர கொலை… சோதனையில் சிக்கியவர்… வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மருமகள், மாமியார் இருவரையும் கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை 8 மாதத்திற்கு பிறகு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடுக்கூரணி கிராமத்தில் சந்தியாகு என்னும் 65 வயது முதியவர் வசித்து வந்தார். இவருக்கு ராஜகுமாரி (60) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான ஸ்டீபன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சினேகா, கணவர் ராணுவத்தில் பணியாற்றுவதால் தனது குழந்தையுடன் கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற வருடம் ஜூலை 14-ஆம் தேதி அன்று சினேகா, அவருடைய மாமியார் ராஜகுமாரி, 7 மாத பெண்குழந்தை ஆகியோர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு கொள்ளை கும்பல் ஒன்று நள்ளிரவில் அவர்களின் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சத்தத்தை கேட்டு எழுந்த மாமியார் ராஜகுமாரி, கொள்ளையடிக்க முயற்சி செய்தவர்களை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதனால் கோபமடைந்த கொள்ளை கும்பல் அருகிலிருந்த இரும்பு கம்பியால் ராஜகுமாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனைக் கண்ட சினேகா கூச்சலிட முயற்சி செய்துள்ளார். அதனால் அந்த கொள்ளைக் கும்பல் அவரையும் விட்டு வைக்காமல் சுத்தியலால் மோசமாக தாக்கியுள்ளனர். அதன்பின் அந்த ஏழு மாத குழந்தையை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் பட்டுக்கோட்டை ஆற்றங்கரை பகுதியில் வசித்து வரும் முத்து முருகன் என்பது தெரியவந்தது. மேலும் முடுக்கூரணியில் நடந்த மருமகள், மாமியார் இரட்டை கொலை வழக்கில் தனக்கும், தனது கூட்டாளிகளுக்கும் சம்பந்தம் உண்டு என ஒப்புக்கொண்டுள்ளார். நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்து சென்றது நாங்கள் தான் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வசித்துவரும் பூச்சிக்கண்ணன், தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரது மகன் செல்லமுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்து வரும் ராஜகோபால கிருஷ்ணன், காளையார்கோவில் பெரிய கண்ணணூர் பகுதியில் வசித்து வரும் வேணுகோபால், பரமக்குடி பொன்னையாபுரத்தில் வசித்து வரும் முருகேஷ்ராஜ் ஆகிய 5 பேரின் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வேணுகோபாலுடைய தம்பி ராஜசேகரும் உண்டு. ஆனால் அவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக கைதான இந்த கும்பல் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் முதியவர்கள், பூட்டியிருக்கும் வீடு, தனியாக இருக்கும் பெண்கள் ஆகியோர்களின் விட்டை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

Categories

Tech |