பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்று வரும் நபருக்கு பிக் பாஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 3 நடந்து வருகிறது.இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாக்கியலட்சுமி என்பவரை பிக்பாஸ் Confession Room மிற்கு அழைத்து அவரின் முன்னாள் கணவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி அவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறினார். மேலும் தன் மகளிடம் இதனை கவனித்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதன் பிறகு வெகு நேரம் யோசித்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடிவெடுத்து போட்டியில் பங்கேற்று வருகிறார்