ஸ்விட்சர்லாந்தில் வரும் கோடைகாலத்திலிருந்து கொரோனாவிற்க்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
கொரோனா தொற்றுக்காக கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போடப்பட்ட நிலையில் ஸ்விட்சர்லாந்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக கட்டுப்பாடுகளை விலக்க முடியும் என நம்புவதாகவும் அது தொடர்பான விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்திதான் கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்த முடியும் என்று கூறியுள்ளனர்.
பைசர் மற்றும் மொடெர்னா நிறுவனங்களிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை ஆர்டர் செய்ததாகவும் அவற்றிலிருந்து ஜூலை இறுதி வரை மக்களுக்கு செலுத்தவேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சரான அலென் பெர்சேட் கூறியுள்ளார். இதுவரை ஸ்விட்ஸர்லாந்தில் அரை மில்லியன் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் இன்னும் தடுப்பு மருந்து இருப்பதால் அது பற்றிய பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் வயது வந்தவர்களில் 75 சதவீதத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு விடும் என்றும் ஏப்ரல் 20ல் எளிதில் பாதிக்ககூடியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு விடும் என்றும் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மற்றவர்களில் பெருபான்மையோருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஜூன் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதனால் கொரோனா கட்டுபாடுகளை ஆகஸ்ட் மாதத்திலிருந்து விலக்கிக் கொள்ள முடியும் என்று பெர்சேட் நம்புகிறார்.