சிவகங்கை இளையான்குடி சாத்தமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் குற்றச்செயல்களை நடைபெறாமல் தடுக்க பல சட்டங்கள் உள்ளது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி சாத்தமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் தாயமங்கலம் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு அருகில் சாத்தமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் அம்மாசி(62) என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டிகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவரிடம் ரூபாய்.1,100 மற்றும் 10 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அம்மாசி மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.