அமெரிக்காவில் ஆசியா நாட்டு முதியவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் ஆசியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியில் 84 வயதான ராங் சின் லியோ என்பவர் பிரான்சிஸ்கோவில் பேருந்திற்காக சாலை ஓரத்தில் வாக்கரில் அமர்ந்தபடி இருந்துள்ளார்.அப்போது திடீரென்று ஒரு இளைஞன் வந்து லியோவை மிதித்து கீழே தள்ளி உள்ளான்.அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத்தொடர்ந்து லியோவை தாக்கிய 23 வயதான எரிக் ராமோஸ் ஹெர்னாண்டஸ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது இந்த செய்தியை லியோ நினைவு கூறி ஆசிய நாட்டவர்கள் மீது அமெரிக்கர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் ஆசிய முதியவர்களை கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை செய்துள்ளார். இதேபோன்று 70 வயதான பெண்மணி ஒருவரையும் தாக்க முயன்ற வெள்ளையர் ஒருவரை அந்த பெண்மணி அடித்து பந்தாடிய செய்தி வெளியானது. மேலும் இதே போன்று சில நாட்களுக்கு முன் இலங்கையர் ர் ஒருவரும் தாக்கப்பட்டிருக்கிறார்.
நியூயார்க்கில் 25 வயதான ஆசிய பெண் மீது அமெரிக்கர்கள் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். இதுபோன்ற அதிகமான இனவெறி தாக்குதல்கள் அமெரிக்காவில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.