நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ பட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, நெப்போலியன் லால், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Want to know how your #RashmikaMandanna is on the set? I am rowdier than the 100 rowdy Annas in #Sulthan I think…🤣
Well … this is why…🤣#SulthanFromApril2https://t.co/7nEaaDBTQt— Rashmika Mandanna (@iamRashmika) March 26, 2021
இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுல்தான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா செய்த சேட்டைகள் அடங்கிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.