இங்கிலாந்து பள்ளியில் முகமது நபியின் கார்ட்டூன் படங்களைக் காட்டிய ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பாட்லே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முகமது நபியின் கார்ட்டூன் படங்களை போட்டு காண்பித்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் அந்த ஆசிரியரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் அந்த ஆசிரியரின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் அந்த ஆசிரியருக்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதற்கு பள்ளி நிர்வாகத்தின் செயலாளர் கவின் வில்லியம்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆசிரியருக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.