பிரபல நடிகை சாய் பல்லவி நடிக்க மறுத்த படத்திற்கு நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி இப்படத்தில் நடிப்பதற்காக பவன் கல்யாண் மற்றும் ராணா ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.
அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க சாய்பல்லவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவர் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் அவர் நடிக்கயிருந்த கதாபாத்திரத்தில் நித்யாமேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.