Categories
சினிமா தமிழ் சினிமா

விஸ்வாசம் படம் இந்த நடிகரின் உண்மை கதையா…? இணையத்தில் பரவும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்…!!

விஸ்வாசம் திரைப்படம் நடிகர் பாலாவின் உண்மை கதை என்று பரவி வரும் செய்திக்கு இயக்குனர் சிவா மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமானின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையில் விஸ்வாசம் கதை எப்படி உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அதன்படி இப்படத்தின் இயக்குனர் சிவாவின் உடன் பிறந்த சகோதரரும், நடிகருமான பாலாவின் வாழ்க்கை கதை தான் விஸ்வாசம் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

பாலாவிற்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். ஆனால் பாலாவும் அவரது மனைவியும் சில காரணங்களால் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை கதையை தான் சிவா படமாக எடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.ஆனால் இயக்குனர் சிவா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, தற்போது இருக்கும் சூழலில் விஸ்வாசம் படத்திற்கு கிடைத்த விருது குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன். நான் சமூக வலைத்தளத்தில் எதிலும் இல்லை. ஆகையால் அதில் என்ன வைரலாகி வருகிறது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் விஸ்வாசம் திரைப்படத்திற்கும், என் தம்பியின் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |