Categories
தேசிய செய்திகள்

பாராளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் …தேர்தல் காரணமாக … 2 வாரங்களுக்கு முன்பே நிறைவு …!!!

5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்குமாறு ,அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

புதுடெல்லியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ,கடந்த  ஜனவரி மாதம் 29ஆம் தேதி தொடங்கி ,பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத் தொடரானது ஏப்ரல் மாதம் 8 தேதி வரை, இரண்டு அமர்வுகளாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. இந்தத் தொற்றிக்கு  மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக நாடு முழுவதும் நோய்  பரவலை தடுக்கும் பணிகளுக்குக்காகவும் ,அடுத்த மாதம் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக ,அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாகவே நடத்தும்படி பல்வேறு அமைச்சர்களும், எம்பிக்களும் வலியுறுத்தி வந்தனர். எனவே 2 மாதங்களாக நடைபெற்ற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது, 2 வாரங்களுக்கு முன்பே நேற்றுடன்  நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இரு அவைகளும் அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தொடரின்  தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Categories

Tech |