வெளியே சென்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் அதிகாரி அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று காரில் எரிபொருள் காலி ஆகி நின்று விட்டது. இதையடுத்து அந்தப் பெண் உறவினருக்கு அழைத்து உதவி கேட்டபோது அவர்கள் அவசர உதவிகளுக்கு தகவல் அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த பெண் ஆலோசனையின் பெயரில் அவசர உதவி குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு காத்திருந்த போது, அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் பெண்மணியின் அருகே வந்து நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறி வயல்வெளிக்கு அவரை இழுத்துச் சென்று அந்த குழந்தையின் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அந்த பெண் வைத்திருந்த நகைகள் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து எரிபொருளுடன் அங்கு வந்த உறவினரிடம் அந்தப் பெண் சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதற்கு அந்த காவல் அதிகாரி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக சென்றது. அந்த பெண்ணின் தவறு இதனால்தான் அவர் கற்பழிக்கப்பட்டார் என்று பதில் கூறியுள்ளார். இந்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதிமன்றத்தில் முறையிட்ட போதும் இரண்டு இளைஞர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.