திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பரவி கொண்டு தான் வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து கொரோனா பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 237 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் திண்டுக்கல்லில் இதுவரை கொரோனாவால் 11 ஆயிரத்து 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.