அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் நட்சத்திரங்களும் தொகுதி தொகுதியாக சென்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் இணைந்து போட்டியிடுகின்றது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக கட்சி மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகை நமீதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.