Categories
தேசிய செய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில்…” பெண்களுக்கு எதிராக 15 லட்சம் சைபர் கிரைம் சம்பவங்கள்”…. அதிரவைக்கும் தகவல்..!!

2019, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 லட்சம் சைபர் முறைகேடு சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் இணைய சேவை பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சமயத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது. இந்நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் பேடி கூறுகையில்:” தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 70p இன் படி சைபர் பாதுகாப்பு முறைகேடு சம்பவங்கள் இந்திய கணினி அவசரகால மீட்புக்குழு கண்காணித்து வருகிறது. அதன்படி அவர்கள் வெளியிட்ட தகவலின் 2019ஆம் ஆண்டு 3 லட்சத்து 94 ஆயிரத்து 499 சைபர் கிரைம், 2020 ஆம் ஆண்டு 11 லட்சத்து 58 ஆயிரத்து 208 சைபர் முறைகேடு சம்பவங்களும் நடந்துள்ளது.

Categories

Tech |