Categories
விளையாட்டு கிரிக்கெட்

புதிய சீருடையில் களமிறங்கும்… சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற 9-ஆம் தேதி தொடங்கும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய சீருடையில் களமிறங்கி அசத்துகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகின்ற 9ஆம் தேதி தொடங்கும் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு இந்த முறை புதிய சீருடையுடன் களமிறங்க தயார் நிலையில் உள்ளது. 2008ஆம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரியான சீருடையை அணிந்து வந்த சென்னை அணி முதல் முறையாக அந்த வடிவமைப்பில் மாற்றம் செய்து ராணுவப் படையினரை கௌரவிக்கும் வகையில் ராணுவ சீருடை குறியின் நிறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீருடையின்  தோள்பட்டை பகுதியில் இருக்கின்றது.

இதுதொடர்பாக சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுவது, ‘ராணுவத்தின் முக்கியத்துவத்தையும்,அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் விதமாகவும், ராணுவத்தின் விழிப்புணர்வை அதிகப்படுத்தும்  நோக்கத்திலும் எங்கள் அணியின் சீருடையில் ராணுவ சீருடையின்  வண்ணத்தை இணைத்துள்ளோம். நாட்டின் உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்கள் தான் என்று அவர் பெருமையுடன்  கூறியுள்ளார். 14-வது கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் முன்னாள் சாம்பியனான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் வண்ணமாக சீருடைகளை அணிந்து களமிறங்குகின்றனர்.

Categories

Tech |