Categories
உலக செய்திகள்

ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடு…. இளவயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மர் ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் நடைபெற்று கொண்டிருந்த மக்களாட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் ராணுவம் ஆட்சியினை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக மியான்மர் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. மேலும் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 20 சிறுவர்கள் உட்பட 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மனித உரிமை ஆணையம் மியான்மரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 17 குழந்தைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ராணுவத்தை எதிர்த்து மக்கள் மண்டோலா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் கஹின் மியோ சீட் (7 வயது) என்ற  சிறுமி பலியாகியுள்ளார். இதுவரை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களில்  இவரே மிகவும் இளையவர் என்று தெரியவந்துள்ளது.  இதனிடையே பலியான சிறுமியின் உடலை அப்பகுதியில் உள்ள முஸ்லீம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சிறுமியின் இழப்பைக் கண்டு அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Categories

Tech |