தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற கட்சியினரை குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவிற்கு ஆதரவாக திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பிரச்சாரத்தின் போது பேசிய அவர் வெளிநாட்டு பசுக்களின் பாலைக் குடித்துவிட்டு பெண்கள் இடுப்பு பெருத்து போய் “பேரல்” போல் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனியின் இந்த பேச்சு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. எட்டு வடிவத்தில் இருந்த பெண்களின் உடல் பேரல் போல் ஆகி விட்டதாகவும் மேலும் அவர் கூறியுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.